* வங்கி கணக்கில் 50000 க்குமேல் பணம் எடுக்க மற்றும் பணம் செலுத்த வங்கியில் கேட்க கூடிய ஆவணம்.
* பான் கார்டு வாங்குவதற்கு ஆதார் அட்டை நகல் மற்றும் 2 புகைப்படம் மட்டும் போதும்.
* பழைய பான் கார்டு அட்டையில் எந்த திருத்தம் இருந்தாலும் செய்து கொள்ளலாம்.எந்த வகை திருத்தமோ அதற்கான ஆதாரம் கொண்டு வந்தால் திருத்தி கொள்ளலாம்.
* பெயர் திருத்தம் செய்ய - வாக்களர் அடையாள அட்டை,வாகன லைசன்ஸ்,அரசாங்க அடியாள அட்டை,பாஸ்போர்ட்.
* பிறந்த தேதி மாற்ற - ஆதார் அட்டை வாகன லைசன்ஸ்,பள்ளி 10 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதல்,வாக்களர் அடையாள அட்டை,பாஸ்போர்ட் ,அரசாங்க அடையாள அட்டை
* புகைப்படம் மாற்ற - புதியதான அண்மையில் எடுத்த புகைப்படம்,மொபைல் எண், இமெயில்
* மைனர் கார்டு 🡪 மேஜர் கார்டு - உங்களுடைய ஆதார்நகல் அண்மையில் எடுத்த புகைப்படம்2 , பழைய பான்கார்டு.
* 2 பான் கார்டு - ஒரு தனி நபருக்கு ஒரு பான் கார்டு மட்டுமே வைத்து கொள்ள அனுமதி உண்டு .தவறுதலாக இரண்டு பான் கரடு இருக்கும் பட்சத்தில் அதை பான் கார்டு விண்ணப்பிக்கும் இடம் மூலமாக திருப்பி ஒப்படைத்து விடலாம்.
* தவறும் பட்சத்தில் 1000 ரூபாய் அபராதம்.எல்லோரும் அவர்களுடைய பான் கார்டு உடன் ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
* வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு பாஸ்போர்ட் கண்டிப்பாக வேண்டும்.வேலை நிமித்தமாக விரும்பினாலும்,படிப்பிற்காக ,மருத்துவ வசதி வேண்டினாலும்,பாஸ்போர்ட் அத்தியாவசியம்.
* பாஸ்போர்ட் எடுக்க ஆதார்அட்டை ஒரிஜினல்,பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதல் ஒரிஜினல் போதும்.
* இப்போது பாஸ்போர்ட் விண்ணப்பித்த 7 நாள் முதல் 15 தினங்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்து விடுகிறது.பாஸ்போர்ட் அலுவலகத்தின் சேவை மிக வேகமாக உள்ளது
* எனவே நேரம் வரும்போது எடுத்து கொள்ளலாம் என எண்ணாமல் உடனடியாக எடுத்து வைத்து கொள்ளலாம்.
* புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்கலாம்,பெயர் சேர்க்க, நீக்க , குடும்ப தலைவர் பெயர் மற்றம் செய்ய
* PF ல் UAN எண் செயல்படுத்த மொபைல் எண் சேர்க்க , ஆதார் எண் சேர்க்க ,வங்கி கணக்கு எண் சேர்க்கலாம்.
* பெயர் ,பிறந்த தேதி திருத்தம் செய்யலாம்,வங்கி கணக்கு எண்ணை மாற்றலாம்.PF ல் உள்ள பிடிமான தொகையில் பகுதியாக அல்லது முழுமையாகவோ எடுத்து கொள்ளலாம்.
* UAN கார்டு பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.PF செட்டில்மெண்ட் தொகை எடுக்க,PF பான் கார்ட் இணைக்க
* அனைத்து ஊர் மக்களுக்கும் மின்கட்டணம் உடனடியாக செலுத்தி கொள்ளலாம்.பழைய மின் கட்டண விபரம் பிரிண்ட் எடுக்கவும், ,வைப்புத்தொகை விபரமும் பார்க்கலாம்.
* குறிப்பிட்ட தேதிக்குள் பணம் செலுத்த தவறிய மின் கட்டணமும் 3-5 நாட்களுக்குள் செலுத்தி கொள்ளலாம்.
* அனைத்து கல்லூரிகளுக்கும் ஆன்லைன் மூலமாக கல்லூரி கட்டணம் ,விடுதி கட்டணம், தேர்வு கட்டணம் ,மறுதேர்வு கட்டணம் மற்றும் இதர அனைத்து கட்டணங்களும் உடனடியாக செலுத்தி கொள்ளலாம்.
* இதர ஆன்லைன் மூலம் பணம் செலுத்த கூடிய அனைத்தும் செலுத்தலாம்.வாகன கடன் மாத தவணையும் செலுத்தலாம்.வாகன ரோடு டேக்ஸ் அனைத்து வாகனங்களுக்கும் செலுத்தலாம்.
* எல்லா வாகனங்களுக்கும் முழு காப்பீடு இன்சூரன்ஸ் மற்றும் மூன்றாம் நபர் காப்பீடு செய்து தரப்படும்
* 1.முழு காப்பீடு எடுக்கும் பட்சத்தில்தான் வாகன விபத்து தருணங்களில் வாகன பாதிப்பை காப்பீடு மூலமாக எளிதாக சரி செய்து கொள்ளலாம்.
* 2.மூன்றாம் நபர் காப்பீடு விபத்து ஏற்படும் பட்சத்தில் நம் வாகனத்தால் மூன்றாம் நபருக்கு ஏற்படும் காயம்(அ) பாதிப்புக்கு மட்டும் காப்பீடு செய்வது
* இதில் மூன்றாம் நபரும் உண்டு.அவரின் பொருள்கள், வாகனம் சேதாரமும் கணக்கீடு செய்யப்படும்.உயிர் இழப்பும் கணக்கிடப்படும்.
* முழு மற்றும் மூன்றாம் நபர் காப்பீடுகளிலும் வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் ஒரே நபராக இருக்கும் பட்சத்தில் அவருக்கு 15 லட்சம் காப்பீடு உண்டு.
* ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களுக்கு தனிநபர் காப்பீடு ஏற்பட்டால் முழு தொகையும் இரண்டு கால்கள் இழப்பு ஏற்பட்டால் (அ) இரண்டு கைகள் இழப்பு ஏற்பட்டால் (அ) ஒரு கை ,ஒரு கால் இழப்பு (அ) பார்வை இழப்பு ஏற்பட்டால் இழப்பு சதவிகிதத்திற்கு ஏற்பட்ட நஷ்ட ஈடு கொடுக்கப்படும்.
* மூன்றாம் நபருக்கு மற்றும் மூன்றாம் நபரின் பொருள் சேதம் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சேதரா மதிப்பை நிருபித்து நஷ்ட ஈடு பெற்று கொள்ளலாம்.
* தனியார் கார் வாகனங்களில் உடன் பயணம் செய்பவர்களுக்கு காப்பீடு செய்து இருந்தால் மட்டும் விபத்து நேரிடும் நேரத்தில் நஷ்ட ஈடு கிடைக்கும்.
* பயனாளிகள் ஆட்டோ,பயனாளிகள் (permitted passengers) குறிப்பிட்ட பயனாளிகள் மட்டும் பயணம் செய்யும் பட்சத்தில் விபத்து காப்பீடு நஷ்ட ஈடு கிடைக்கும்
* மிக முக்கியமானது வாகனத்திற்க்கும், வாகன ஓட்டுனருக்கும் எல்லா ஆவணங்களும் முறையாக இருக்கும் தருணத்தில் மட்டுமே காப்பீடு நிறுவனம் வாகன கிளைம் எடுத்து கொள்ளப்படும்.
* ஆகவே வாகன உரிமையாளர்கள் வாகனத்திற்கும் ,ஓட்டுனருக்கும் எல்லா ஆவணங்களும் முறையாக உள்ளதா என வாகனத்தை எடுக்கும் முன்பு சரிபார்க்கலாம்.
* தனி ஒருவருக்கு மட்டும் விபத்து மூலமாக ஏதேனும் பாதிப்பு(அ) உயிர் சேதம் ஏற்படும் பட்சத்தில் காப்பீடு நிறுவனம் பாலிசிதாரரின் வாரிசுக்கு காப்பீடு தொகையை வழங்கும்
* காப்பீடு தொகை 50 லட்சம் வரைக்கும் வருமான சான்று காட்ட அவசியம் இல்லை 18 வயத்துக்கு மேல் யார் வேண்டுமானாலும் காப்பீடு எடுத்து கொள்ளலாம்.
* தனி நபர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரே பாலிசியாக எடுத்து கொள்ளலாம். இது எதிர்பாராத விதமாக ஏற்படும் மருத்துவ செலவுகளை நமக்காக காப்பீட்டு நிறுவனம் செலவு செய்து நம் நலம் காக்கும்.
* இது காப்பீடு தொகையை பொருத்து பிரீமியம் தொகை மாறுபடும்
* ஒரு சில நாள்பட்ட நோயை தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் மற்றும் விபத்துகளுக்கும் உடனடியாக மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம்.
* பேருகால செலவு கூட – ஆண்டு தொடர் பாலிசி செய்துவருபவர்களுக்கு கிடைக்கும்.
* எல்லா தரப்பு மக்களும் மருத்துவக் காப்பீடு ஒரு தேவையில்லா செலவு என அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.என்றேனும் எதிர்பாராத ஒரு நிகழ்வு நிகழும் தருணத்தில் அய்யய்யோ இன்றைய மருத்துவ செலவுக்கு யாரிடம் கடன் கேட்பது எந்த நகையை அடகு வைப்பது, எந்த இடத்தை விற்பது என அவசரத்தில் கஷ்டப்படுவோம். அல்லது செலவு செய்ய வழியில்லாமல் அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவம் பார்ப்போம்.
* இதுவே ஒரு மருத்துவ காப்பீடு இருந்தால் எந்த ஒரு பயமும் இல்லாமல் முன் பணம் செலுத்தாமல் பெரிய வசதியுடன் கூடிய மருத்துவமனையில் நல்லதொரு மருத்துவம் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் பயன் பெறலாம்.
* எந்த ஒரு நகையையும் அடகு வைக்க வேண்டாம், யாரிடமும் கடன் வாங்க வேண்டாம்,எந்த இடத்தையும் விற்க வேண்டாம்.
* அதிலும் குடும்பமாக பாலிசி எடுக்கும் பட்சத்தில் ஒரே காப்பீட்டுத் தொகையை அதாவது யாரெனில், தனி நபர் ஒருவருக்கோ அல்லது எல்லாரும் பகிர்ந்தே பயன் படுத்திக் கொள்ளலாம்.
* உயிர் வாழ் சான்றிதழ் வருடத்திற்க்கு ஒரு முறை ஒவ்வொரு வருடக் கடைசியிலும் நவம்பர் மாதம் முதல் பதிவு செய்ய வேண்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே அடுத்த ஒரு வருடத்திற்கு தடையில்லாமல் பெண்கள் பணம் கணக்கிற்கு வந்து சேரும்.
* இந்த உயிர் வாழ் சான்றிதழ் ஆதார் கைரேகை மூலமாகமும் கண்ரேகை மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.
* நடக்க முடியாதவர்கள் இருந்தால் அவர்களுடைய வீடு தேடிவந்து சான்றிதழ் பதிவு செய்து தரப்படும்.
* ஜெராக்ஸ், கலர் ஜெராக்ஸ் பிரின்ட்அவுட், லேமினேசன். மின்சாரம் இல்லாவிட்டாலும் எல்லா சேவைகளும் பேட்டரி மூலம் செயல்படும்.
* அனைத்து வைகயான பாரங்களும் கிடைக்கும், ஸ்டாம்ப், பத்திரங்கள், வெளியூர், அனுப்ப உதவும் தபால் கவர்கள் புரோ நோட், தபால் அனுப்பும் ஸ்டாம்ப் ரெவன்யூ ஸ்டேம்ப், பச்சை பேப்பர் A4, A3, LGL பேப்பர்கள் கிடைக்கும்
* அனைத்து வாகனங்களுக்கும் பெயர் மாற்றம் செய்ய,பைனான்ஸ் அடிக்க ரோடு டேக்ஸ் கட்ட, வாகன லைசன்ஸ் லேனர், புதிய லைசன்ஸ் மற்றும் புதுப்பித்துத்தரப்படும். வாகன லைப் புதுப்பித்துத்தரப்படும்.
* இன்சுரன்லிலும் பெயர் மாற்றம் செய்துதரப்படும்