#

மணீஸ் பேங்க் பாப்பான்குளம்

நிறுவனர் அறிமுகம்:

     17-6-1947 ல் A.சுப்பிரமணியம் @ A.S.மணியம் தீர்த்தாரப்புரம் என்றக் கிராமத்தில் பிறந்து. எட்டு வயதில் தனது தந்தையை இழந்தார் அதன் பின்பு தாயார் மாலையம்மாள் வளர்ப்பில் தனது 2 தம்பிகளுடன் மிகவும் கஷ்டப்பட்டு தனது பள்ளிப்படிப்பை தினமும் 8 KM நடந்து சென்று முடித்தார். பின்பு மேல்படிப்புக்கு செலவு செய்ய தனது தம்பிகள் மற்றும் தாயாரின் கடின உழைப்பால் மிகவும் நல்ல முறையில் ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தார்.


     தன் படிப்பை முடித்த உடனே ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்தது. ஆனால் அது தன்னை மிகஉயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லாது என எண்ணி வேலை வேண்டாம் என முடிவெடுத்தார்.


     அதன் பின்புதான் சுயமாக தொழில் செய்ய முடிவு செய்து தன் 2 தம்பிகளுடன் சேர்ந்து பல சரக்கு கடை ஒன்று பாப்பான்குளத்தில் 1972ல் தொடங்கினார்.


     ஆடியில் தொழில் தொடங்கினால் தொடங்கிய தொழில் சிறப்பாக இருக்காது என கூறிக்கொண்டு இருக்கும் காலங்களில். ஆடியில் தொழில் தொடங்கி 30 க்கும் மேற்ப்பட்ட கிராமங்களிலிருந்து போட்டி போட்டுக் கொண்டு நமது மணீஸ் ஸ்டோர் என்றால் 30 கி.மீட்டர் சுற்றளவு மக்களுக்கு நன்கு தெரியும் அளவு தொழிலில் நேர்மை , உண்மை , நல் உழைப்பு என எல்லா மக்களையும் கவரும் வண்ணம் நடைபெற்றார்.


     அதன் பின்பு 1994 க்குள் 1 கோடி அடைவதே என் லட்சியம் என கூறி அதையும் சாதிக்குக் காட்டியவர். தன்னால் 1 நபர் கூட கண்ணிர் சிந்தக் கூடாது என என்னுபவர். தன் உழைப்பும் சம்பாத்தியமும் எந்த ஒரு மக்களையும் எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என என்னுபவர். தன் உழைப்பும் சம்பாத்தியமும் எந்த ஒரு மக்களையும் எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என தீர்க்கமாக இருந்தார். அறிவே துணை என தன் ஒவ்வொரு நிமிடமும் நினைத்து அது படி செயலிலும் வாழ்ந்து காட்டியவர்.


     முடியாது என எப்போதும் கூற மாட்டார் அதை எப்படி முடிக்கலாம் என நேர்மறை சிந்தனையுடன் வாழ்ந்து வந்தவர்.


     ஒருவர் தன் வாழ்நாளில் ஒரு வீடு கட்டிப்பார், ஒரு கல்யாணம் செய்து பார் என்பார்கள் திரு A.S.மணியம் அவர்கள் தன் வாழ்நாளில் 2 புதிய வீடுகள் கட்டியவர், 5 குழந்தைகளுக்கு சிறப்பாக திருமணங்கள் நடத்தியுள்ளார், 2 தரிசு நிலங்களை பெரிய தோட்டங்கள் உருவாக்கியவர். 3 பெரிய கிணறு வெட்டியவர். இப்படி எந்த ஒரு செயலையும் மிகச் சாதாரணமாக செய்து முடித்தவர்.


     1972 ஆம் ஆண்டு மணீஸ் ஸ்டோர்


     1990 ஆம் ஆண்டு மணீஸ் சிட்பன்ட்ஸ்


     1996 ஆம் ஆண்டு மணீஸ் பேங்கர்ஸ்


     2002 ஆம் ஆண்டு மணீஸ் ஹோலோ பிளாக்ஸ்


     2003 ஆம் ஆண்டு A1 ஹோலா பிளாக்ஸ்


     2004 ஆம் ஆண்டு மணீஸ் A1 பியூல்ஸ்


     2007 ஆம் ஆண்டு மணீஸ் பேலஸ்


     இப்படி சாதனைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.


     இவரில் கடின உழைப்புக்கு கடவுள் ஒய்வு கொடுக்க நினைத்தது ஜூன் - 4 – 2021 அன்றோடு அவரின் உழைப்புக்கு ஒய்வு மற்றும் மூச்சுக்கும், உயிருக்கும் ஒய்வு ஆக மாறியது.


     இவரின் இழப்பு பாப்பான்குளம் ஊர் மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு. அவரின் குடும்பம் தன் உயிர் பிறந்த அளவு வேதனை அடைத்தார்கள்.


திரு. ராஜா அருணாசலம்

     திரு A.S. மணியத்தின் ஒரே மகன், MBA படித்துள்ளார். தந்தை வழியில் மிகச் சிறப்பாக தந்தையின் தொழில்களை திறம்பட நடத்தி வருகின்றார் கிராமத்தில் கிராமமக்களுக்கு தேவையான, மற்றும் இல்லாத செவைகளை செய்து வருகின்றார்.


உண்மை – உழைப்பு – உயர்வு

     நாம் செய்யும் செயலில் உண்மையும் தன்னால் முடிந்த அளவு கடின உழைப்பும் இருந்தால் உயர்வு தன்னை தானாக தேடி வரும், என்பது தாரக மந்திரம்.

A.S.மணியம்
12/02/2019

திரு. ராஜா அருணாசலம்
12/02/2019